என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லஞ்ச ஒழிப்பு சோதனை"
திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அலுவலகத்தின் கதவை வெளிப்புறமாக பூட்டி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
அப்போது பத்திர பதிவிற்காக சுமார் 30-க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தின் உள்ளே இருந்தனர். அவர்களிடம் உண்மையில் பத்திரபதிவிற்காக வந்தார்களா? என போலீசார் விசாரணை செய்து அவர்களுடைய பெயர், முகவரிகளை எழுதி வாங்கிக் கொண்டு வெளியில் அனுப்பினர்.
பின்னர் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடம் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். நள்ளிரவு 12 மணிவரை இந்த சோதனை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 2 ஆயிரத்து 250 பறிமுதல் செய்யப்பட்டது. ஆலந்தூர் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. குமரகுரு தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து லஞ்சஒழிப்பு போலீசார் கூறியதாவது:-
பத்திரப்பதிவு செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து பணம் பெறுவதாக வந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவு செய்வோர் ஏற்கனவே உள்ள ஆன்லைனில் செலுத்தும் வசதியுடன் ஆயிரத்திற்குள் உள்ள தொகையும் இன்று முதல் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால் பத்திரபதிவு செய்வோர் எந்த ஒரு தொகையும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கொண்டு வர தேவையில்லை. அப்படி பணம் வைத்துஇருந்தால் முறையான கணக்கு காட்டலாம். இந்த சோதனையில் அலுவலகத்திற்குள் இருந்த கணக்கில் காட்டப்படாத ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரப்பதிவு உயர்அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்படும். பின்னர் கணக்கில் வராத பணத்திற்கான விளக்கம் சார் பதிவாளரிடம் கேட்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 60 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சார்பதிவாளராக பணியாற்றி வரும் ராங்கியம் கிராமத்தை சேர்ந்த சுமதி என்பவரிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டை உதவி கமிஷனராக கடந்த ஆண்டு பணிபுரிந்தவர் முத்தழகு. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு பணியில் சேர்ந்த அவர் கடந்த ஆண்டு மே மாதம் வரையில் உதவி கமிஷனராக பணியாற்றினார்.
தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வரும் ராமபுரம் சமஸ்தான வாரிசான கார்த்திக் சேதுபதி என்பவரை கடத்தி சொத்தை அபகரிக்க ரவுடிகள் சிலர் முயற்சி செய்தனர்.
இதுதொடர்பான குற்றச்சாட்டை உதவி கமிஷனர் முத்தழகு விசாரித்தார். அப்போது ரவுடிகள் ஒருவனை கைது செய்யாமல் இருக்க அவர் ரூ.5 லட்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக ரவுடியின் சகோதரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இறுதியில் ரூ.3½ லட்சம் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
உதவிகமிஷனர் முத்தழகு பேசியதாக கூறப்படும் ஆடியோ வாட்ஸ்அப்- பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட முத்தழகு பின்னர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படையில் பணி அமர்த்தப்பட்டார்.
அங்கு உதவி கமாண்டராக பணியில் உள்ளார். ஆடியோ வெளியானதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்தழகு மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தனர். ஆடியோவில் இருப்பது முத்தழகுவின் குரல்தானா? என்பதை கண்டுபிடிப்பதற்காக அவருக்கு குரல் பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணாநகர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பில் உதவி கமிஷனர் முத்தழகு வசித்து வருகிறார். அவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. உதவிகமிஷனர் முத்தழகு 1987-ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.
பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று உதவி கமிஷனர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். சென்னை போலீஸ் வட்டாரத்தில் நன்கு பரிட்சயமான அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவது சக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பெங்களூர்:
கர்நாடகாவில் அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் பெங்களூர் வளர்ச்சி முகமை தலைமை பொறியாளர் கவுடய்யா உள்பட 5 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை மேற் கொள்ளப்பட்டது.
பெங்களூர், சிந்தாமணி, மைசூரு, உடுப்பி, சிக்மகளூர், மங்களூர், கர்வார் உள்ளிட்ட பகுதிகளில் பல குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் 17 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இந்த அதிரடி சோதனையை நடத்தினர். #Vigilance
சேலம்:
சேலம் உடையாப்பட்டியில் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் புதிய லைசென்ஸ், வாகன தகுதி சான்று, லைசென்ஸ் புதுப்பித்தல் போன்றவற்றிற்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சந்திரமவுலி தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.
உடனே அலுவலகத்தின் கேட்களை பூட்டிய அவர்கள் உள்ளே இருந்த புரோக்கர்கள், ஆர்.டி.ஓ. கதிரவன், ஆய்வாளர்கள் பதுவை நாதன், லோகநாதன் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்பட பலரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு நின்ற புரோக்கர்கள் சிலர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார் அலுவலக கேட்களை மூடி விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்குள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.
அப்போது அலுவலக நாற்காலி இடுக்குகள் மற்றும் அந்த அலுவலர்களிடம் இருந்து கணக்கில் வராத 2 லட்சம் சிக்கியது. லஞ்சம் பெற்றது தொடர்பாக சில ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் எப்போதும் புரோக்கர்கள் 30-க்கும் மேற்பட்டோர் நிற்பார்கள் என்பதால் அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி புரோக்கர்களுக்கு சொந்தமாக அந்த பகுதியில் உள்ள 3 அலுவலகங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புரோக்கர்கள் அலுவலங்களில் இருந்தும் 1 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. 2-வது நாளாக இன்று காலையும் சோதனை நடந்து வருகிறது.
இதற்கிடையே ஆர்.டி.ஒ. கதிரவன் மற்றும் ஆய்வாளர்கள் லோகநாதன், பதுவைநாதன் மற்றும் புரோக்கர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று மாலை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
இச்சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர்கள் அனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். பின்னர் பூட்டிய அறைக்குள் சோதனை நடந்தது. அங்கிருந்த கோப்புகள், ஆர்.சி.புக், மேஜை அறை, உணவு பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களை சோதனை செய்தனர்.
மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த அனைவரையும் தனித்தனியாக போட்டோ எடுத்து பதிவு செய்தனர். விடிய, விடிய இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது கட்டு, கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. ஆர்.டி.ஓ. ஆபிசில் இருந்த அலுவலர்கள் மற்றும் அவர்களது இருக்கையில் இருந்த ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆபீஸ் கழிவறையில் வீசப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 3½ லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்